மீதொடமுல்ல சம்பவத்திற்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம்

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பாரியளவிலான மக்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் இழக்கப்பட்டுள்ளது. இவ் இழப்பீட்டுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த குப்பை மேட்டின் ஒரு தொகுதி சரிந்து விழுந்து 2013ம் ஆண்டு ஜனவரி 02ம் திகதி முதல் ராஹூல வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தின் மக்கள் இக்குப்பை மேட்டை அகற்றுமாறு தொடர்ந்தும் அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். இவ்வாறு இருக்கையில் பாடசாலையை மூடிய அதிகாரிகள் குப்பை மேட்டை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் தற்போதைய அரசாஙகமும் அந்நடவடிக்கையை மேற்கொண்டதினாலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டள்ளது.


மீதொடமுல்ல ராஹூல வித்தியாலயத்தை மூடிய சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த குப்பை மேட்டை அகற்றி பாடசாலையை திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் அனர்த்தத்தை நீக்காது பாடசாலை திறக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அவர்களும் இந்த குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்காமையினாலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


தற்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களில் ஐந்து சிறுவர்களின் சடலங்களும் அடங்குவதாக தகவல்கள் குறிப்பிடுவதோடு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. இந்நிலைமையினுள் இச்சம்பவத்திற்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும் என்பதுடன் உடனடியாக குப்பை மேட்டை அகற்றி அப்பிரதேச மக்களின் வாழ்க்கை, அவர்களது சொத்து, சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top