லங்கா நிவுஸ் வெப் இணைய தடையை ஒன்றிணைந்தோர் நீடிக்கின்றனர் !

ராஜபக்ஷவின் கடந்த ஆட்சியின் கீழ் 'லங்கா நிவுஸ் வெப்' இணையம் ஆறு வருடங்களாக இயங்கியது இலங்கையினுள் தடைசெய்யப்பட்ட நிலையிலேயே. அந்நாட்களில் லங்கா நிவுஸ் வெப் இணையம் செயல்படுவது தொடர்பில் வேறு வழிகளை பின்பற்ற வேண்டியிருந்தது. அதன் சூழ்ச்சி ராஜபக்ஷ ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் தங்களுக்கு அதிகாரம் இல்லாத இச்சந்தர்ப்பத்தில் கூட லங்கா நிவுஸ் வெப் இணையத்தின் ஊடகவியலாளர்களின் ஊடக அறிக்கைக்கு இடையூறாக இருக்கின்றனர்.


லங்கா நிவுஸ் வெப் இணைய நடவடிக்கைகள் 2009ம் ஆண்டும் ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இருந்த ராஜபக்ஷ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிக்கு எதிராக ஊடக அறிக்கை வெளியிட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இலங்கை வாசகர்களுக்கு எமது இணையத்தை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு 'லங்கா நிவுஸ் வெப்' இணையம் தடை செய்யப்பட்டது.


இத்தடை நீக்கப்பட்டது ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்தியதன் பின்னரே. அதிகாரம் அற்ற ராஜபக்ஷர்கள் மற்றும் ராஜபக்ஷ ஆதரவாளர்களினால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என குழு ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது எமது ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் செய்தியும் கூட எமது இணையத்தில் வெளியிடப்பட்டது. இருப்பினும் கடந்த நாட்களில் ஊடக அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சென்ற லங்கா நிவுஸ் வெப் இணைய ஊடகவியலாளர் மீண்டும் திருப்பியனுப்பட்டுள்ளார்.


அவர்களது ஊடக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக சென்ற எமது ஊடகவியலாளருக்கு இடமளிக்க முடியாது எனவும் அதற்கு காரணம் என்ன என தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஷெரன் சமரநாயக்க 'எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தெரியாதா? எமது தலைவர் விருப்பம் இல்லை. விசேடமாக தினேஷ். கடந்த நாட்களில் அவரது பிரச்சினைகள் எத்தனையோ வெளிவந்தது தானே. பெட்ரி போட்ட பூனையைப் போல் பேசிய மனிதன் இப்பொழுது சத்தமே இல்லை. அப்படி இருக்கும் போது நீங்கள் வருவதை விரும்புவாரா?' என தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top