2020ல் அனைத்து வகையான மருந்துகளின் விலை குறையும் !

அனைத்து வகையான மருந்துகளின் விலை 2020ல் குறைவடையும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து மருந்தக உரிமையாளர் சங்கத்தின் வடமாகாணசபை கிளையின் சபை அமர்வின் போது சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான 48 மருந்துகளின் விலை குறைப்பின் பின்னர் ஒசுசல உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களது இலாபம் குறைவடைந்து என சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்கு தீர்வாக அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்தில் மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அவர்களிடம் வேண்டகோள் விடுத்துள்ளார். அங்கு நூற்றுக்கு 18 வீதம் விற்பனை இலாபத்தை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதனை விசாரனை செய்ய வேண்டும் எள தான் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் எதிர்வரும் காலங்களில் இருதய சத்திரசிகிச்சை தொடர்பில் பயன்படுத்தப்படும் ஸ்டென்ஸ் விலை குறைப்பதற்கும், தனியார் வைத்தியசாலை கட்டுப்படுத்துவதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இதன் போது அத்தியாவசிய 48 மருந்துகளின் விலை குறைப்பு பொதுமக்களுக்கான சலுகையை ஏற்றுக் கொண்டு அகில அலங்கை ஒசுசல உரிமையாளர்கள் சங்கத்தினால் சுகாதார அமைச்சருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

இதன் போது வடமாகாணசபை சுகாதார அமைச்சர் பீ.சத்தியலிங்கம், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஹேமன்த பெனரகம, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உணவு மற்று மருந்து பரிசோதகர் அமித் பெரேரா, அகில இலங்கை ஒசுசல உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top