மீதொட்டமுல்லை  பலி எண்ணிக்கை உயர்வு !

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதோடுஇ மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர், கொலன்னாவை பிரதேச பொதுச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள் விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தால் உயிரிழந்த அனைவரது இறுதிக் கிரியைகளையும், பூரண அரச ஒத்துழைப்புடன் நடத்த, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நஸ்ட ஈடு அல்லது முன்னர் அவர்கள் இருந்ததை விட சிறந்த நிலையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று (16) அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top