கொழும்பு குப்பை ஜாஎல மற்றும் பிலியந்தலைக்கு !

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததுடன் கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு இரண்டு புதிய இடங்களை குறிப்பிட்ட அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


அதில் ஒன்று ஜாஎலயில் அமைந்துள்ளதுடன் ஏனையவை பிலியந்தலை மற்றும் ரத்மலானையில் அமைந்துள்ள கரடியனாறு என்ற பிரதேசத்தில் உள்ளது.


இருப்பினும் இந்த பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுதல் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு வருகின்றது. பொதுமக்கள் மற்றும் பிரதேசவாழ் மக்கள் கரடியனாறு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு செல்படுகின்றனர். அத்துடன் அருட்தந்தை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஜாஎல பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


இதற்கிடையிலேயே மீதொடமுல்ல பிரதேசத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட மாட்டாது எனவும் அது தொடர்பில் பதிதாக இரண்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு நாளும் கொழும்பு பிரதேசத்தில் 1000 டொன் குப்பை சேகரிக்கப்படுகின்றது. குப்பைகளை அகற்றுவதற்கு ஓர் இடம் இல்லாதிருந்தால் கொழும்பு பிரதேசத்திலுள்ள குப்பைகளை கொட்ட முடியாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர் என கொழும:பு நகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top