குப்பைக் கொட்டத் தடை!

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடங்களில் குப்பைகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தெரிய வருகின்றது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

பிரதேச சபைகள், நகர சபைகள் அல்லது ஏதேனும் அரசாங்க நிறுவனங்களுக்கு குப்பை சேகரிக்க காணி அவசியமாயின்,அவர்கள் வசமுள்ள ஒதுக்கீடுகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மீதொட்டுமுல்லை குப்பை மேடு மக்கள் குடியிருப்பில் சரிந்து விழுந்தமையால் 69 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுமாயின் வீடுகளை பெற்றுக் கொடுக்க விரைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் 25ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் இன்றும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top