விரைவில் தனியார் வைத்தியசாலையிலும் விலை கட்டுப்பாடு இடம்பெறும்

தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறை செய்யும் அறிக்கை தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டாரவினால் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேணாரத்னவிடம் நேற்று மாலை சுகாதார அமைச்சில் கையளித்துள்ளார்.


சர்வதேச நிறுவனமான முபுஆP நிறுவனத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் சிகிச்சைக்கான கட்டணம், ஆய்வுகூட சேவைகள் மற்றும் ஏனைய ஆய்வுகளுக்கான கட்டணம் ஆகியவை அடங்கிய இந்த அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் தனியார் வைத்தியசாலையில் கட்டண ஒழுங்குமுறை இடம்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதிலும் அமைந்துள்ள 40 தனியார் வைத்தியசாலைகளின் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நிறுவனத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top