மீதொட்டமுல்லயின் தற்போதைய நிலை என்ன?

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போதுவரையில் காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கை 10 என கணிப்பிடப்பட்டு்ளளது. எனினும் இதுவரையில் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் இராணுவத்தினர் நேற்று மாலை சிறு பிள்ளையின் சடலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குப்பை மேடு சரிந்தமையனால் 246 குடும்பத்தை சேர்ந்த 1059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 76 குடும்பங்களை சேரந்த 284 பேர் இடர்காப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு அருகில் ஆபத்தான 3 இடங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.

இந்த குப்பை மேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 130 வீடுகள் ஆபத்தான மூன்று வலயத்திற்குள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

படங்கள் - நிசாந்த

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top