சிரச FM சிரேஸ்ட அதிகாரி உடன் பதவி விலகல்!

சிரச  FM வானொலியின் பிரதானி சிரேஸ்ட ஊடகவியலாளர் கிங்ஸிலி ரத்நாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளதாக குறித்த நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரச ஊடக வலையமைப்பின் தலைவர் சாந்தி பகிரதனுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே அவர் இவ்வாறு பதவி விலகியதாக தெரியவருகிறது. அதன்பின் கிங்ஸிலி ரத்நாயக்க தனது இராஜினாமா கடிதத்தை நிர்வாக பிரிவில் கையளித்துவிட்டு தன்னிடம் இருந்த நிறுவன சொத்துக்களையும் கையளித்துவிட்டு வீடு சென்றுள்ளார்.

கிங்ஸிலி ரத்நாயக்க 1993ம் ஆண்டு தொடக்கம் சிரச ஊடக வலையமைப்பில் பணிபுரிவதுடன் குறித்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முன்னின்று உழைத்தவர்.

இவருடன் இணைந்து சிரச ஊடக வலையமைப்பின் முன்னேற்றத்திற்கு உழைத்த நிஹால் விக்ரம எதிரிசூரியவும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top