மௌபிம பத்திரிகையை மகாராஜாவிற்கு விற்ற அலஸ்!

கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள டிரான் கிரிஸ்தோபர் அலஸ் தனக்குச் சொந்தமான 'மௌபிம' மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிகைகளை மகாராஜா கூட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான் அலஸிடம் இருந்து வசூலிக்க வேண்டிய கடன் தொகையை ஈடுசெய்து கொள்ளும் வகையிலேயே மகாராஜா நிறுவனம் குறித்த பத்திரிகைகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மகாராஜா கூட்டு நிறுவனமும் தற்போது அதிக நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் முதல்தர ஊடகமாக இருந்த சிரச ரிவி தற்போது பின்தள்ளப்பட்டுள்ளதுடன் அதன் இடத்தில் 'ஹிரு' மற்றும் 'தெரண' ரிவி ஆகின உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top