பெற்றோலிய ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகின்றனர் !

திருகோணமலை சீன துறைமுகத்தின் எண்ணெய் தாங்கி தொகுதி அமைச்சரவை பத்திரம் ஊடாக இந்தியாவிற்கு வழங்குவதற்கு பிரதமர் தயாராகின்றதுடன் அதற்கு எதிராக பெற்றோலிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகின்றதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல நேற்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ம் திகதி அவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையில் ஈடபட்டுள்ளதாக ரன்வல தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் சொத்தாக கருதப்படும் சீன துறைமுக எண்ணெய் தாங்கி தொகுதியை இந்தியாவிற்கு கையளிப்பதற்கு அரசாங்கம் தயார் என்றாலும் சுத்திகரிப்பிலிருந்து போக்குவரத்து வரையான எரிபொருள் பெற்றுக் கொடுப்பது வரையறை செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கம் பெற்றோலிய ஊழியர்கள் மீது கவனம் செலுத்தாவிடின் நாட்டின் அனைத்து துறையும் முடக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டிய ரன்வல எவ்விதத்திலும் எதிர்காலத்தில் சொத்துக்களை பாதுகாப்பதில் நாம் கைவிட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oil 2

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top