மீதொடமுல்ல அனர்த்தம் இலஞ்ச அரசியலின் பிரதிபலன் - ரவீந்திர காரியவசம்

மீதொடமுல்ல அனர்த்தம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற வாய்ப்பு இருக்கின்றமையினால் அதனை தடுக்கும் முகமாக தேவையான நடவடிக்கைகளை தற்பொழுது உருவாக்க வேண்டும் என கலாநிதி ரவீந்திர காரியவசம் மீதொடமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சி செலுத்தும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இலஞ்ச அரசியல் மற்றும் அரச அதிகாரிகளின் தவறுமே இன்று அனர்த்தத்தில் பலியானவர்களின் உயிர்களுக்கு பொருப்பேட்க வேண்டும் எனவும் உயிரிழந்தவர்களுக்காக ரூபா ஒரு இலட்ச நஷ்டஈடு வழங்குவதனால் அது நியாயமாகாது எனவும் காரியவசம் தெரிவித்துள்ளார்.


சுற்றுச்சூழல் அமைச்சரான ஜனாதிபதி தற்பொழுதாவது இலஞ்ச அரசியலில் உள்ள குப்பைகளை அகற்றி அதற்கு நிகரான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


குப்பையினால் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில் பொது மக்களின் உயிரை பறிக்க இடமளிக்க கூடாது என இதன் போது கலந்து கொண்ட பிரபல நடிகர் பிரசன்ன விதானகே தெரிவித்துள்ளார்.

DNP 4831 copy

DNP 4870 copy

DNP 4893 copy

DNP 4925 copy

DNP 4841 copy

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top