'குப்பை' வேலைக்கு ஜனாதிபதியிடம் அதிகாரம் கோரும் முதலமைச்சர் இசுறு !

குப்பை தொடர்பிலான அதிகாரம் மாகாண சபைகளுக்கு உண்டு என்பதனால் ஒன்பது முதலமைச்சர்களுக்கும் இந்த பிரச்சினையை ஒப்படைத்திருப்பது குப்பை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நேற்று (20) ஸ்ரீலசுக தலைமைகயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். குப்பை பிரச்சினைக்கா தீர்வு தொடர்பில் தேசிய ரீதியில் பிரிதொரு நிறுவனம் அவசியமில்லை எனவும் மேல்மாகாணசபை முகாமைத்துவ அதிகாரசை போதுமானது எனவும் முலமைச்சர் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் குப்பை பிரச்சினை தீர்வுக்கு மாகாணசபையிடம் ஒப்படைத்திருந்தால் தற்பொழுது எழுந்துள்ள நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார். குப்பை முகாமைத்துவம் தொடர்பில் வேலைத்திட்டத்திற்கான அவசியம் மாகாணசபைக்கு இருந்தும் அதற்கு இடமளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மீதொடமுல்ல குப்பை தொடர்பில் வெஸ்டன் பவர் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தும் அது தொடர்பில் அந்நிறுவனம் பத்து பன்னிரெண்டு வருடங்களாக அனுமதி பெற்றுக் கொண்டு வருகையில் கொழும:பு மாநகரசபை மீதொடமுல்ல குப்பை மேட்டுக்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு அந்நிறுவனத்திற்கு முடியாதிருந்தது. இருப்பினும் இவ்வாறான காரணம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியாது எனவும் அதனை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top