​சைட்டம் பொதுமக்கள் பிரச்சினை அல்ல - ராஜித

சைட்டம் தரம் குறித்து போராட்டம் நடத்தப்பட்டால் அதற்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் அந்த போர்வையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மற்றும் வைத்திய பீட மாணவர்களின் பிரச்சினையாக உள்ள சைட்டம் பொதுமக்கள் பிரச்சினை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்து இதுகுறித்து வரும் கருத்துகள் அவ்வாறே அமைவதாக அவர் கூறினார். சைட்டம் குறித்து சத்தம் இடுவோர் பலர் இலசவ கல்வி குறித்த அறிவில்லாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய கற்கை நெறி குறித்து பல மாணவர்களுக்கு போதிய அறிவு இல்லை என அவர் கூறினார். எனினும் மாணவர் போராட்டத்தின் பின்னணியில் உள்ள கட்சிகள் இந்த நாட்டில் உடைத்தவை தவிர கட்டியெழுப்பியவை எதுவுமில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top