டிலான் மீதான விசாரணை துரிதம்

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணை முடக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென வேகம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற மோசடி குறித்து பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணை நடத்தி வந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டது.

டிலான் பெரேரா நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்து கருத்துக்கள் வௌியிட்டு வருவதால் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவையில் இதுகுறித்து பேசப்பட்டுள்ளதுடன் கடந்த ஆட்சி காலத்தில் டீல் சிக்கலில் மாட்டி பின் இந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கியதால் முடக்கப்பட்டுள்ள விசாரணைகளை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

அரச வாகன பாவனை முறைக்கேடு தொடர்பில் ஏ.எச்.எம்.பௌசியிடம் விசாரணை நடத்தப்பட்டமைக்கும் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top