மே 29 வரை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்றோம் -GMOA

சயிட்டம் நிறுவனம் குறித்து அரசாங்கம் பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதாகவும் தற்பொழுதும் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானத்திற்கு அரசாங்கம் வரவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தீர்மானத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்தமை குறித்து அரசாங்கத்திற்கு மே மாதம் 29;ம் திகதிவரை காலம் வழங்குவதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நவீன்த சொய்சா தெரிவித்துள்ளார்.

சயிட்டம் நிறுவனத்தின் மாணவர்களுக்கு முறையான கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேணாரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தாலும் கூட ஏப்ரல் 7ம் திகதி அரச அறிக்கை ஒக்றை வெளியிட்டு தெரிவித்ததாவது, அந்த மாணவர்களுக்கு நுட்பமான மருத்துவ பயிற்சி பெற்றுக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக நவீன்த சொய்சா தெரிவித்துள்ளார்.

இதனால் அரசாங்கத்தில் தீர்மானம் என்ன என்பது பற்றிய பிரச்சினை எனவும் மே மாதம் 29ம் திகதி இது குறித்து இணக்கத்திற்கு வர வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top