இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தீவிர விசாரணை !

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பிலான பிரச்சினை இதுவரை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளதுடன் அவர் மட்டுமின்றி பாராளுமன்றத்தில் இருக்கும் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் விசாரனை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


கீதா குமாரசிங்க மட்டுமின்றி இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தகவல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அல்லது ஏனைய நிறுவனத்திலோ அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடவில்லை.


கீதா குமாரசிங்கவிற்கு மேல் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒக்டோபர் வரையிலான ஒத்திவைப்பு வரை அதிகாரம் உள்ளதுடன் அதுவரை அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பாதுகாப்பாகவே இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top