ஐதேக அமைச்சுகளை அசைக்கு முயற்சித்தால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம் !

அமைச்சரவை மாற்ற போர்வையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு உரிய அமைச்சுகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பெற்றுக் கொடுக்கப்படுமேயானால் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமருக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


சில மாதங்களாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதாக தகவல்கள் குறிப்பிட்டாலும் நாளுக்கு நாள் அவை காலம் கடத்தப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரவை மாற்றத்திற்கு இணங்கவில்லை.


நிதி அமைச்சு உட்பட பல அமைச்சுகளில் மாற்றம் இடம்பெற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறிப்பிடுகின்றது. இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு உரிய முக்கிய அமைச்சுகள் சில ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்குவது குறித்து முயற்சிப்பதுடன் அவசரமாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தே நோக்கமாகும்.


எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போது அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டமைக்கமைய எதிர்வரும் காலங்களில் செயல்பட முடியும் எனவும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு உரிய அமைச்சை எவ்விதத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பெற்றுக் கொடுக்க முடியாது எனவும் அவ்வாறான முயற்சிகளை எடுக்குமாயின் அரசாங்கத்திலிருந்து விலகுவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top