மீண்டும் வேலைநித்தத்திற்கு தயாராகும் பெற்றோலிய ஊழியர்கள் !

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் கடந்த 24ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. பிரதமர் தொழிற்சங்கத்துடன் ஏற்படுத்திய இணக்கத்திற்கு எதிராக செயல்படுவதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்துடன் ஏற்படுத்திய இணக்கத்திற்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே எனவும் அதற்கு பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்களின் கோரிக்கைக்கு பாரிய எதிர்ப்பு இடம்பெறுவதாகவும் அத்தொழிற்சங்க ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. இக்கடிதம் குறித்து 7 பெற்றோலிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

zpetro

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top