தடை உத்தரவையும் மீறி இடம்பெறும் மாணவர்களின் பேரணி !

இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட சயிட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தடை உத்தரவை பிற்பித்திருந்தாலும் அதனை பொருட்படுத்தாது தமது எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.


அனைத்து மருத்துவ பீட மாணவர்களின் செயற்குழுவின் தலையீட்டில் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் ஒற்றுமையை இல்லாதொழித்தல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு பொலிஸாரின் வேண்டுகோளை ஏற்று கொழும்புகோட்டை நீதவான் லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


எவ்வாறாயினும் தடை உத்தரவிற்கு இடையூறு விளைவிக்காதவாறு பேரணியை நடத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழக ஒன்றியம் தீர்மானித்துள்ளதுடன் இருப்பினும் பேரணியை எந்த இடத்திலிருந்து ஆரம்பிப்பது குறித்து அவர்கள் அறிவிக்கவில்லை. அத்துடன் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த பேரணி நீதிமன்ற உத்தரவு காரணமாக தாமதமாகியுள்ளது என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top