400 மில்லியன் யூவான் உதவியை மேலும் அதிகரிக்க சீனா இணக்கம்

சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் அடைந்து கொள்ள முடியுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்காக தமது நாடு மேலும் இரண்டு பில்லியன் யுவான்களை வழங்கும் என்றும் சீன ஜனாதிபதி கூறினார் என அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக் குழுவினருடன், சீன பொதுமக்கள் அரங்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டு பூர்தியாகும் நிலையிலும், றப்பர்- அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 65 வருடங்கள் நிறைவடையும் நிலையிலும், இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை சீன ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் தேசிய ஒற்றுமை நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்திக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்த சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின இலங்கையின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டில் வழங்கப்படும் 400 மில்லியன் யூவான்களுக்கு மேலதிகமாக 2018 - 2020 ஆம் ஆண்டு காலப் பகுதிகளுக்கென மேலும் இரண்டு பில்லியன் யூவான்கள் வழங்கப்படும் என்றும், குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top