இராணுவத்தின் தேவைக்கேற்றவாறே வடகிழக்கு காணி விடுவிப்பு !

பாதுகாப்பு பரிவின் ஊடாக கைப்பற்றப்பட்டுள்ள வட கிழக்கு மக்களின் பரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக அரச தரப்பினர்கள் தெரிவித்திருந்தாலும் கூட குறிப்பிட்ட நிலங்களை பெற்றுக் கொடுக்கும் போது குறிப்பிடப்பட்ட நிலங்களின் நிரந்தர பதிவு குறித்து தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் தற்பொழுதும் அந்த பிரதேசத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளிடமே உள்ளது என மீன்பிடி ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவு ஒன்றிணைந்து முதலாவதாக குறிப்பிடப்பட்ட நிலம் தேசிய பாதுகாப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் சுற்றுலாத்துறைக்காக அதனை பெற்றுக் கொண்டதாகவும் அவ் அமைப்பின் செயலாளர் ஹர்மன் குமார தெரிவித்துள்ளர். குறிப்பிடப்பட்ட நிலங்கள் விடுவிப்பது குறித்து அரசாங்கம் சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் அனைத்து கருத்துகளும் போலியானது எனவும், கடந்த அரசாங்கம் செயல்பட்டவாறு இவ் அரசாங்கமும் செயல்படுகின்றது எனவும் குறிப்பிட்ட செயலாளர், குறிப்பிட்ட நிலங்களை பெற்றுக் கொடுத்ததன் பின் தத்தமது கடமைகள் குறித்து செல்லும் குடியிருப்பாளர்கள் பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக அந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கவில்லை என தெரிவிக்கின்றமை பாரிய பிரச்சினையாக கருதப்படுகின்றது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top