பிலியந்தலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு !

பிலியந்தலை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த 11 வயதான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (19) உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு எதிராக பிலியந்தலை - மொரட்டுவ வீதியில் அரச வங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. அந்த தருணத்தில் அருகில் இருந்த கடையில் நின்றிருந்த சிறுமியின் மீது துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது.

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top