கொழும்பு மாநகரசபை வேலையினால் தொடர்மாடி குடியிருப்பாளர்களுக்கு அனர்த்தம் !

மாளிகாவத்தை தொடர்மாடி வீடுகளில் குடியேறியுள்ள ரயில்வே ஊழியர்கள் மற்றுமு; அவர்களின் குடும்பத்தினருக்கு அனர்த்தம் ஏதும் ஏற்படுமாயின் அதற்கான தீர்விற்காக வேலைத்திட்டம் ஒன்று கொழும்பு மாநகரசபை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே வல்லுநர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மாளிகாவத்தை ரயில்வே வீடுகள் நூறு வருடங்கள் பலமைவாய்ந்த பாவனைக்கு உதவாத வீடுகளாக அரசாங்கம் மதிப்பீட்டாளர் மூலம் மதிப்பீடு செய்துள்ளதுடன், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ரயில்வே திணைக்களத்தில் பல்வேறு துறைகளில் சேவையாற்றும் ஊழியர்கள் சிலர் இந்த ரயில்வே வீடுகளில் குடியேறியுள்ளனர் என அந்த சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.ரத்ணசிறி தெரிவித்துள்ளார்.


முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டம் குறித்து நில அளவை நடவடிக்கையில் ஈடுபடும் போது சுவர்கள் இடிந்து விழுவதற்கான சூழ்நிலை உள்ளதினால் உயிர்களுக்கு அனர்த்தம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது என ரத்ணசிறி சுட்டிக்காட்டியுள்ளார். மழை நாட்களில் மழை நீர் நிரம்பியிருக்கும் இந்த பூமியில் மிகவும் மோசமடைந்து காணப்படுவதுடன் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் நோயினால் பாதிக்கப்படுவதுடன் இந்த வீடகளில் வாழும் ரயில்வே ஊழியர்கள் கடும் சிரத்திற்குள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளார்.


'பொதுமக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவது குறித்து நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதாகும். இருப்பினும் மக்களின் வாழ்வை பாதிக்காதவாறான வேலைத்திட்டம் இடம்பெறவில்லை. தற்பொழுது முடிவடைந்துள்ள தொடர்மாடி வீடுகள் பல உள்ளன. அந்த தொடர்மாடி வீடுகளில் ரயில்வே ஊழியர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். இருப்பினும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் முன்வரவேன்டும்'


இருப்பினும் அனர்த்தம் இடம்பெறுவதற்கு மன் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டும் என ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top