இரட்டை குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நடக்கும்?

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பனர் பதவி குறித்து உயர்நீதிமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றது. அதற்கமைய இரட்டை குடியுரிமை கொண்ட பத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.


இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களுக்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் கீதா குமாரசிங்க மட்டுமின்றி ஏனையவர்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடவில்லை.


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை குறித்து தகவல்கள் கோரியுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த தகவல்கள் கிடைத்ததன் பின் அதனை பகிரங்கமாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.


கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கத்தை தடுத்து நிறுத்தும் முகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் அந்த உத்தரவின் பின்னர் ஒக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையின் கீழ் இதுவரை இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்து தகவல்கள் குறிப்பிடுகின்றது.


இப்பிரச்சினை காரணமாக குறிப்பிட்ட பத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுமாயின் முக்கிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதடன் பாராளுமன்றத்திலும் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.விசேடமாக ஸ்ரீலசுக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடைவதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் பாரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடுகின்றது.


எவ்வறாயினும் ஸ்ரீலசுக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்பதனால் பதவி நீக்கத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் கீதா குமாரசிங்க உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது அதன் பிரதிபலனாக கருத முடியும்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top