திறமையான நிதி அமைச்சரே எம்மிடம் உள்ளார் - நவீன் திஸாநாயக்க

நிதி அமைச்சருக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கு, தீர்மானம் எடுப்பதற்கு அவகாசம் இருக்க வேண்டும் எனவும் இருப்பினும் 1994ம் ஆண்டு முதல் அந்த நிலவரம் மாற்றமடைந்துள்ளதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 1977 முதல் முதல் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழ் நியமிக்கப்பட்டமை தவறான விடயம் எனவும் இன்று (19) சிறிகொத்தயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.


அதனை மாற்றி நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நிதி அமைச்சு பதவிக்கு வேறொருவரை நியமிப்பது மிகவும் முக்கியமான தீர்மானம் என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ரவி கருணாநாயக்க மட்டுமின்றி தனது தந்தைக்கு, லலித் எதுலத்முதலி மீது கூட குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதுடன் இருப்பினும் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக கருத முடியாது எனவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்க மிகவும் திறமைசாலி எனவும் அவர் தறவான தீர்மானங்களை எடுக்கும் விதத்தில் செயல்படமாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top