கண்டியில் 11வது மரணம்!

கண்டி, ஒகஸ்ட்டாவத்த பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார். கண்டி சர்வதேச பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்களாக தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகரித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நோயினால் தற்போது வரையில் கண்டி மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4330 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் பொது மக்களின் ஆதரவு போதுமானதாக இல்லை என அவர் கூறியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top