உயர்தர பரீட்சைக்குத் தயாரா!

பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கபொத உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தாமதமின்றி பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் 2 இலட்சத்து 37,943 பேரின் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் கடந்த 07ம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் அந்த அனுமதிப் பத்திரங்களை பாடசாலை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என்று பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 77 ஆயிரத்து 284 பேரின் அனுமதிப் பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த தினத்திற்குள் விண்ணப்பத்து அனுமதிப் பத்திரங்கள் இதுவரை கிடைக்கப் பெறாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின் அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தனிப்பட்ட முறையிலும் இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.

தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 1911 அல்லது 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும். இவ்வாண்டிற்கான கபொத உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 02ம் திகதி வரை 2230 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top