மீதொடமுல்ல குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களுக்கு ரூபா ஒரு மில்லியன் !

மீதொடமுல்ல குப்பை மேடு சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபா ஒரு மில்லியன் விகிதம் நேற்று (ஜூலை 11) கொலன்னாவை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


கடந்த ஏப்ரல் 14ம் திகதி மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக 32 பேர் உயிரிழந்தனர்.


பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து விசேட அமைச்சரவை அனுமதியின் ஊடாக இவ் இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டதா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.


''தற்செயலாக நடந்ததில்லை'


'இவ் அனர்த்தம் இயற்கையில் இடம்பெற்றதே தவிர சாலாவ அனர்த்தம் போன்றதல்ல. மிகவும் தெளிவாக இவ் இரு அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பிந்திய தீர்மானத்தினாலேயே இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சேதமடைந்த வீடுகளுக்கு கிடைக்கபெறும் இழப்பீடுத் தொகை போதுமானதல்ல என இதன் போது கலந்து கொண்ட மீதொடமுல்ல குப்பை மேடுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கீர்த்திரத்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top