அணித்தலைவராக சந்திமால் !

இதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ்,  தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


சிம்பாபேயுடன் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 3-2 தோல்வியுற்றதன் பின்னர் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நேற்று தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


தினேஷ் சந்திமால் பல சந்தர்ப்பங்களில் இலங்கை குழுவிற்கு தலைமை தாங்கியதுடன் ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக கடந்த போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top