சூரிவெவ சம்பவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - இலங்கை கிரிக்கட்

சூரியவெவ விளையாட்டரங்கின் சேவைக்கு தற்காலிக அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பில் வருத்தம் தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது குறித்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு கவலை தெரிவித்து இன்று (12) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து குறிப்பிட்ட அதிகாரிகள் விசாரனை செய்வதாகவும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சம்பந்தமாக இழப்பீடு பெற்றுக் கொடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம்பாவே - இலங்கை ஒரு நாள் போட்டியில் போட்டி நடத்தப்பட்ட காலம் முதல் சூரியவௌ விளையாட்டரங்கின் நடவடிக்கைக்காக தற்காலிகமாக 100 ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஒரு நாள் ஊதியமாக ரூபா 1000 வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சேவை காலம் முடிவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகள் மீள் பெறப்பட்டதுடன் அது குறித்து ஊழியர்களுக்கு முன்பே அறிவித்துள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top