ஊழல் ஒழிப்பு குழுவால் எந்த பயனும் இருக்கவில்லை

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்திற்கு கடந்த ஒன்றரை வருடங்களாக 65 மில்லியன் ரூபா செலவு செய்த போதிலும் பலன் தரக் கூடிய எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை என இணை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊழல் ஒழிப்பு குழுவிற்கு கடந்த 2016ம் ஆண்டு 12 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த வருடத்தில் 26 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் பதவிக் காலம் முடிந்ததன் காரணமாக செயலகத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில்லை என அமைச்சரவை தீர்மானித்தது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top