உமா ஓயா வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு !

உமா ஓயா வேலைத்திட்டம் காரணமாக இடம்பெற்றுள்ள சேதத்திற்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இவ்வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 32ம் இலக்க கிராமசேவை பிரிவிற்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் ரூபா 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் குடிநீர் வசதி இன்மையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்கள் பல உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி குழாய்கினறு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.

அபாய வலயத்தில் வாழும் மக்களுக்காக நிலங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான நிலங்கள் வெகு விரைவில் இணங்காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா வேலைத்திட்டம் காரணமாக 18 பாடசாலைகள் சீர்த்திருத்தம் செய்வதற்கும் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top