கூட்டணி அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்

அரசாங்கத்திற்குள் அதிருப்திகள் இருந்த போதிலும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பது என்றால் 41 பேரும் இருப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகுவது என்றால், அனைவரும் விலகுவோம், ஆனால், விலகுவதாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 பேர் தம்முடன் இணையப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியிருந்தமை தொடர்பாக, இன்று ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும் பலருக்கு கடும் அதிருப்திகள் இருந்தன. எனினும் கூட்டணியில் இருந்தனர்.

இதன் இறுதி முடிவாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது வேட்பாளராக போட்டியிட்டார்.

அதேபோல் தற்போதைய அரசாங்கத்திலும் பல கட்சிகள் இணைந்துள்ளன. இதனால், பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top