அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தடை !

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடையுத்தரவை இன்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதனால் அதற்கு தடை விதிக்குமாறு பத்பேரியே விமலஞான தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி இடம்பெற உள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top