முன்னாள் கடற்படையின் ஊடகப்பேச்சாளருக்கு விளக்கமறியல் !

இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மன்வைக்கப்பட்ட முன்னாள் கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.தஸநாயக்க இம்மாதம் 19; திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2008 ஆண்டுக் காலப்பகுதிகளில், கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்திச்சென்று, அவர்களை சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க கடந்த 12ம் திகதி வெலிசர கடற்படை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


மேற்படி இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் வருகை தந்திருக்கவில்லை. இந்நிலையிலேயே, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வெலிசர கடற்படை வைத்தியசாலைக்குச் சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கைது செய்திருந்தனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top