டிசம்பர் 31வரை இருங்கள், ஸ்ரீலசுக அமைச்சர்களிடம் ஜனதிபதி வேண்டுகோள் !

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐதேக உடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஸ்ரீலசுக பிரதி அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவசரபடாமல் செயல்படுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் ஸ்ரீலசுக உறுப்பினர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31ம் திகதிவரை அரசாங்கத்துடன் இருக்குமாறும் அக்காலத்தினுள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட ஸ்ரீலசுக உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குறிப்பிட்ட அமைச்சர்களிடையேயான சந்திப்பு பங்களதேஷ் விஜயத்தின் போது இடம்பெற்றுள்ளது.

பிரதி அமைச்சர் உட்பட ஸ்ரீலசுக உறுப்பினர்கள் 18 பேர் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் குறிப்பிடுவதுடன் பொதுமக்களுக்காக எதுவும் இடம்பெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலேயே இச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top