சைட்டம் அரசமயமாகாது - ராஜித உறுதி

சைட்டம் என்று அழைக்கப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசாங்கம் சுவீகரிக்காது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை எதிர்வரும் 17ம் திகதி அரசாங்கம் சுவீகரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வைபவம் நடைபெறும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இருதய நோய் மருத்துவர்களின் தலையீட்டின் அடிப்படையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பிரதமர் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

மருத்துவ அதிகாரிகளுடனான சந்திப்பில் சுகாதார அமைச்சரின் விருப்பம் மற்றும் அவர் சந்திப்பில் கலந்து கொண்டு வேண்டும் என இரண்டு நிபந்தனைகளை பிரதமர் விதித்தார். இதற்கு இணங்கி மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்திப்பில் கலந்து கொண்டது.

சைட்டம் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சுகாதார அமைச்சர் மீது தனிப்பட்ட ரீதியாக தாக்குதல் நடத்த கூடாது என கூறினார். அரசாங்கத்தின் தீர்மானங்களையே சுகாதார அமைச்சர் செயற்படுத்தி வருகிறார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரச்சினையை சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்ளுமாறும் பிரதமர், மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அரச மருத்துவச்சபைக்கு தலைவராக நியமிக்க வேண்டிய இரண்டு பேரின் பெயர்களை மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

முன்னாள் தலைவர் ஒருவரும், தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளரும் இதில் அடங்குகின்றனர். இது குறித்து ஆராய்ந்து புதிய தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top