இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க !

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். காவன் ரத்நாயக்க என்பவர் அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் சகோதரராவார்.


லேக்ஹவுஸ் தலைவராக இரண்டு வருடங்களாக சேவையாற்றியதுடன் நேற்று (15) அவர் இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் கெலிபோனியா பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார்.


அவர் 1998-2007 வரை ஐடீஆ நிறுவனத்தில் இந்நாட்டு தலைவராக செயல்பட்டதுடன் டயலொக் புரோட் பேன்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், டயலொக் மற்றும் கார்கில்ஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top