வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் அது மலையக மக்கள் !

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதனாலேய மயைக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள முன்னெடுக்கபட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு வரும் போது ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தவைவருமான வே.இராதாகிருஸ்ணன்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இனைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்க்கான அடிகல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் வருமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர். காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று. நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்குமா. தற்போது 13 வருடம் கல்வி கட்டாய கல்வியாக மாற்றபட்டள்ளது. சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியம் என்றும் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top