தாமரை மொட்டுடன் வளம் வரும் மஹிந்த அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு முழுவதும் உள்ள பிரதான நகரங்களில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மஹிந்த நாடு முழுவதும் செல்லவுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அவருடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிட ஆயத்தமாகுவதாக பசில் ராஜபக்ச இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கலைஞர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் 400க்கும் அதிகமானோர் தமது கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாகவும் 700க்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.

தற்போது குறித்த அங்கத்தவர்களை இணைத்து கொள்ளும் வேலைத்திட்டத்திற்காக பதாதைகள் மற்றும் பிரச்சார சுவரொட்டிகளை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top