திருடர்களே ரவி மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டு வந்துள்ளார்கள் !

திருடர்களே ரவி மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டு வந்துள்ளார்கள் !பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தற்பொழுது பல்வேறு பிரச்சாரங்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய வங்கி இடம்பெறுவது பிரதமரின் கீழ் என்பதனால் மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹசீம் போன்ற அமைச்சர்கள் ஆணைக்குழுவை சந்திப்பதற்கு பிரதமர் ஆணைக்குழுவை சந்தித்து நடைபெற்ற சம்பவம் குறித்து தெளிவுபடுத்துவாரேயாயின் இது இவ் பிணைமுறி பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான ஒரு வழிகாட்டல் ஆகும் என அசாத் சாலி நேற்று (08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய விசாரனைகள் முடிவடையாத சூழ்நிலையில் ஊடகங்களுக்கோ அல்லது பிரிதொரு தரப்பினருக்கோ இது குறித்த தீர்மானம் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருநாணாயக்க இவ்விசாரனையின் போது இராஜினாமா செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று ரவி கருநாணாயக்க இராஜினாமா செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்கள் திருடர்கள் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top