தராதரம் பாராது பிணைமுறி திருடர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் !

தராதரம் பாராது பிணைமுறி திருடர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் !பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்து தராதரம் பாராது அனைவருக்கு ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று (08) கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

பிரதமருக்கும் இதில் பொறுப்புகள் உள்ளது எனவும் ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் ஆணைக்குழுவின் அறிக்கை நீதவானுக்கு முன்வைத்து நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லும் போது நீண்ட நாட்களாகும் என்பதனால் இவ் ஆட்சி காலத்தில் பிணைமுறி மோசடிக்கு தொடர்புபட்டவர்கள் குறித்து தண்டனை கிடைப்பது என்பதில் நம்பிக்கை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வந்தவுடன் பழைய மோசடிகளை மறைக்க முடியாது எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணையில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக வாக்களிப்பதனால் திருடர்களுடன் ஒரே வரிசையில் நிற்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ் நம்பிக்கையில்லா பிரேரணையுடன் இதுவரை நாட்டை ஆட்சி செய்திருப்பது திருடர்கள் எனவும் அதற்கமைய பொதுமக்களுக்கு புதிதாக சிந்திப்பதற்கு காலம் வரும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top