ரத்துபஸ்வல கொலைகள் - பிரிகேடியர் உட்பட சந்தேகநபர்களின் விளக்கமறியலில் நீடிப்பு

கம்பஹா - ரத்துபஸ்வலயில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த இராணுவ அணியினருக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் அனுர தேசப்பிரிய உட்பட சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் ருவான் பத்திரண இன்று உத்தரவிட்டுள்ளார்.

பிரிகேடியர் தேசப்பிரிய, இராணுவ சார்ஜன்ட் டிங்கிரி அருணகே சிறிசேன, சார்ஜன்ட் லலித் கேர, கோப்ரல் ஜயசுந்தர முதியன்சலாகே திலகரட்ன ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அகில தினேஷ், ரமில ரவிஷான் ஆகிய பாடசாலை மாணவர்கள் மற்றும் நிலந்த புஷ்பகுமார என்ற இளைஞன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top