மைத்திரி, ரணில், ரவி இன்று விசேட சந்திப்பு !

மைத்திரி, ரணில், ரவி இன்று விசேட சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நேற்று இடம்பெற்ற 'கொழும்பு சர்வதேச தேநீர் அருந்துதல்' பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பிரதமர் ரவி கருணாநாயக்கவை அமைச்சரவையில் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்திருந்ததுடன் இன்று இடம்பெறும் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

தற்பொழுது சமூக வலைத்தளங்கள் ஊடாக ரவி கருநாணாயக்க இராஜினாமா செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுகின்றது. எது எப்படி இருப்பினும் பிணைமுறி மோசடியில் ரவி கருநாணாயக்க குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுவிட்டதை மறுக் முடியாது. பிணைமுறி ஆணைக்குழு மற்றும் ரவி கருணாநாயக்கவின் பிரச்சினை குறித்து சட்டத்தரணி ஒருவர் எம்மிடம் தெரிவித்த கருத்து 'இது ஒரு கொலை பற்றி விசாரனை செய்யும் போது பிலியல் துஷபிரயோகம் செய்தவர்கள் சிக்கியது போன்ற செயல்' என தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top