நடுக்கடலில் சிக்கித் தவித்த ஆறு பேர் மீட்பு

தென் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி சுமார் 3 வார காலமாக மிதந்து கொண்டிருந்த படகொன்றில் இருந்த 6 மீனவர்கள் இன்று அதிகாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 'தினு புதா 1 ' என்ற படகு இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்தது.
இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையிலேயே அவர்கள் இன்று மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாகவும் சுமார் 240 கடல் மைல்கள் தூரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள செயல்நீக்கத்தினால் கடலில் மிதக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, 'சாகர' கப்பலினூடாக மீட்புப் பணிகளை முன்னெடுத்த கடற்படையினர், குறித்த ஆறு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான முதலுதவி உட்பட உணவு மற்றும் பிற தேவைகளை குறித்த கப்பலின் கடற்படையினரால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]lankanewsweb.net

Top