சுமதிபால, யாப்பா - ரவியை இராஜினாமா செய்யுமாறு கூறுவதற்கு என்ன உரிமை உள்ளது ?

சுமதிபால மற்றும் யாப்பா ரவியை இராஜினாமா செய்யுமாறு கூறுவதற்கு என்ன உரிமை உள்ளது ?  திலங்க சுமதிபால மற்றும் லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் ரவி கருணாநாயக்கவை இராஜனாமா செய்யுமாறு கூறுகின்றனர். சிறிசேனவிற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்த அவர்களுக்கு அவ்வாறு கூறுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது?

லக்ஷ்மன் யாப்பா பகிரங்கமாக சிறிசேனவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்தார். இவர்கள் சிறிசேன் சிறைக்கு சென்றார் என்றால் என்ன அல்லது சிறிசேன தோற்றுப் போனால் கூட இவர்கள் பார்ப்பதற்கு கூட செல்லாதவர்கள். ராஜபக்ஷ தோல்வியுற்றும் சிறிசேனவிடம் சேர்ந்தவர்கள். பொதுத் தேர்தலின் போது இவர்கள் இருவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. இவர்கள் தேசிய பட்டியலில் இணைத்துக் கொண்டது சிறிசேன செய்த பிழை. இவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ பற்றி கவலை இல்லை. காரணம் தமது சுயநலத்தினால் தமது ஆசனத்தை இழந்தார்கள்.

ரக்பி வீரர் தாஜூடீன், ஊடகவியலாளர் எக்னலிகொட மற்றும் லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் தாக்குதல் குறித்து கடந்த 3 வருடங்களாக இவ் அரசாங்கம் செய்தது என்ன? பில்லியன் கணக்கில் நுPகு மோசடி பற்றி இவ் அரசாங்கம் செய்தது என்ன? இதற்கான விசாரனையை பற்றி ஏன் இவர்கள் பேசுவதில்லை? ஏன் இவர்களுக்கு இதனை செய்ய முடியாது?யாப்பா மற்றும் சுமதிபால இருவரும் கடந்த அரசாங்கத்தில் சுமார் 11 வருடங்களாக பங்குதாரர்களாக இருந்ததனாலேயே இதனை இவர்கள் செய்யவில்லை. ரவி பல வருடங்களாக வியாபாரம் செய்பவர். இதனால் யாப்பா மற்றும் சுமதிபால போன்றவர்களை பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

சிறிசேனவிற்கு எதிராக ராஜபக்ஷ சார்பாக இணையும் காலம் ஏற்படுமேயானால் ராஜபக்ஷ அருகில் முதலில் செல்வது இவர்கள் இருவரும் தான். முன்னாள் ஐ.தே.க பொதுச் செயலாளர் ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் போது லக்ஷ்மன் யாப்பா அவருடன் நெருங்கி இருக்கும் ஆதாரங்கள் பல ஊடகங்கள் வாயிலாக உள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top