எனது இராஜனாமாவிற்கு எவ்வித அழுத்தமும் இல்லை !

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையின் போது தான் இராஜினாமா செய்வதாக தெரிவித்தார். எவ்வித அழுத்தமும் இன்றி தான் இத்தீர்மானத்திற்கு வந்ததாகவும் இராஜினாமா குறித்து கவலையடையவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


சட்ட விரோத சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வித தேவையும் இல்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனது எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரமற்றது எனவும் அது வெகு விரைவில் நிரூபிக்கப்படும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். 


இடம்பெற்ற அரசாங்கத்தைப் போல் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பது தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அதனை தெளிவு படுத்த அரசாங்கம் முன்வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு தான் வழங்கிய பங்களிப்பு குறித்து தான் திருப்தியடைவதுடன் எவரின் அழுத்தமும் இன்றி தனது விருப்பத்துடன் இத்தீர்மானம் எடு;க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top