'பிணைமுறி மோசடியின் கதாநாயகன்' அந்த சிரேஸ்ட அமைச்சர் யார்?

பாராளுமன்றில் தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை விடுத்து வௌியில் வந்த ரவி கருணாநாயக்க, பிணைமுறி மோசடியில் முன்னின்று செயற்பட்ட தேர்தல் மூலம் பாராளுமன்றுக்குத் தெரிவாகாத சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்தி உண்மையை வௌியிடவுள்ளதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். 

குறித்த சிரேஸ்ட அமைச்சர் தனக்கும் பிணைமுறி மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இந்த மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து தெரியாது எனவும் கூறிவருகின்றார்.

எனினும் குறித்த அமைச்சர் இது தொடர்பில் பிரபு நிலை நபர் ஒருவருடன் நடத்திய உரையாடலை ரவி கருணாநாயக்க குரல் பதிவு ​செய்து வைத்துள்ளதாக தெரியவருகிறது. 'நான் எனக்கு கிடைக்கும் ஆலோசனைக்கு அமைய செயற்படுகிறேன்' என்று குறித்த அமைச்சர் தெரிவித்து வருகின்றார். 

எமது இணையத்திற்கு கிடைத்துள்ள தகவல்படி விரைவில் தொலைக்காட்சி ஒன்று குறித்த அமைச்சர் குறித்த உண்மைகளை வௌியிடவுள்ளது. குறித்த அமைச்சர் விசாரணைக்கென பிணைமுறி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட வேண்டும். இதுவரை அவர் விசாரணைக்கு செல்லவில்லை.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top