அடுத்தது விஜயதாச..!

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் சிலர் குறித்து மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர், நீதியமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஆகியோர் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் மீர பெரேரா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தனது நேர்மையை வெளிகாட்டுவதற்காக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் அர்ப்பணிப்புடனான கடமை.

நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களில் திருடர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்திய விதம் குறித்து பாரதூரமான கேள்வி எழுந்துள்ளது.

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு சம்பந்தமாக 8 ஆயிரத்து 600 பக்கங்களை கொண்ட அறிக்கையை 48 மணி நேரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வாசித்து முடித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச 9 கோடி ரூபாவை செலவிட்டு தனது பெற்றோருக்கு அருங்காட்சியகத்தை நிர்மாணித்தமை சம்பந்தமான கோத்தபாயவின் கையெழுத்தை இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top